மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் மீது, அதே பெயரை கொண்ட ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதால் விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க கோரியும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனது பெயரும், மெட்டா சி.இ.ஓ-வின் பெயரும் ஒன்றாக இருப்பதால், ஃபேஸ்புக் தனது கணக்கை ஐந்து முறை முடக்கியுள்ளதாக வழக்கறிஞர் மார்க் ஸக்கர்பெர்க் குற்றம்சாட்டியுள்ளார்.
வழக்கறிஞரின் கணக்கு முடக்கப்பட்டதால் விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதை ஈடுசெய்ய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் மார்க் ஸக்கர்பெர்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு ஒரே பெயரை கொண்ட இரண்டு நபர்களுக்கு இடையே எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva