Dulquer: துல்கர் சல்மான் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கும் லோக்கா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அப்ளாஸை குவிக்க தொடங்கி இருக்கிறது.
நல்ல கதைகளை திரைப்படமாக எடுத்தால் கண்டிப்பாக ரசிகர்கள் விரும்புவார்கள் என்பது தான் நிதர்சனம். ஆனால் கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமா அந்த விஷயத்தை தவற விட்டு ப்ரமோஷனில் அதிக கவனம் செலுத்துவதாக ஒரு பிரச்சனை நிலவி வருகிறது.
முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள் படத்தின் ரிலீஸ் இருக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக எல்லா பிரபல சேனல்களுக்கும் உட்கார்ந்து பேட்டி கொடுத்து தன்னுடைய படத்தை பிரபலமாகி வந்தனர். முதலில் அதை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ஆனால் இதையே எல்லா இயக்குனர்களும் தொடர்ந்து செய்ய தற்போது ரசிகர்களுக்கு சலிப்பை தட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான பிரபல திரைப்படம் ஒன்றின் டாப் ஸ்டார் கூட தன்னுடைய இயக்குனர் பேட்டியாக கொடுத்துக் கொண்டிருக்கிறார் என மேடையில் அப்பட்டமாக அவரை கலாய்த்து இருந்தார்.
இதுவும் ரசிகர்களுக்கு தற்போது சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என நீங்களே பேசுவதற்கு பதில் நல்ல கதைகளை எடுத்தால் ரசிகர்களே உங்களை கொண்டாடுவார்களே என தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் லோக்கா.. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல் ஷோ தொடங்கி தற்போது வரை படம் டாப் கியரில் சென்று வருகிறது. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து வருகிறது. இப்படத்தினை மலையாள நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார்.
அவர் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், படத்திற்கு எல்லாரும் முன்கூட்டியே புரோமோஷன் செய்வாங்க. நீங்க படம் வெற்றி அடைஞ்ச பிறகு பண்ணுறீங்களே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், எங்களுக்கும் இந்த படத்திற்கு எப்படி பிரமோஷன் செய்ய வேண்டும் என முதலில் தெரியவில்லை.
ஆனால் படத்தின் வரவேற்பு எந்தவித ப்ரோமோஷனும் இல்லாமல் ஆர்கானிக் ஆக அமைய வேண்டும் என எதிர்பார்த்தோம். அதற்காக முதலில் எந்த பிரமோஷன் செய்ய வேண்டாம் என முடிவு செய்தோம். அது மட்டும் அல்லாமல் எல்லா மொழிகளிலும் படத்தை எடிட் செய்து தயாராக வைத்திருந்தோம்.
மலையாளத்தில் கிடைத்த ஆதரவிற்கு பின்னரே மற்ற மொழிகளில் படத்தை வெளியிட முடிவு செய்தோம் என தெரிவித்திருக்கிறார். இவரின் இந்த பேச்சு தற்போது ரசிகர்களும் இதே விஷயத்தை தமிழிலும் பின்பற்றினால் கண்டிப்பாக வெற்றி படங்களை குவிக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.