துருக்கியில் ரூ.7 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட சொகுசு கப்பல் கடலில் இறக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளேயே மூழ்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.
கடந்த 2-ம் தேதி துருக்கியின் மெட் யில்மாஸ் கப்பல் கட்டும் தளத்தில் (Med Yilmaz Shipyard) உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் 2024-ல் தொடங்கப்பட்டது. கட்டி முடித்த பிறகு, இஸ்தான்புல்லில் இருந்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டால்ஸே வென்டோ (Dolce Vento) என பெயரிடப்பட்ட அந்தக் கப்பல் 24 மீட்டர் நீளமும், 160 GT மோட்டார் யாட் எடையும் கொண்டது.
கடந்த 2-ம் தேதி துருக்கியின் பிரபலமான சுற்றுலாத் தளமான சோங்குல்டாக் (Zonguldak) கடற்கரையிலிருந்து கப்பல் கடலில் இறக்கப்பட்டது. அந்தக் காட்சியை அங்கிருந்த ஒருவர் தன் செல்போனில் படம் பிடித்திருக்கிறார்.
கடலில் இறக்கப்பட்ட அந்தக் கப்பல் சில நிமிடங்களில் மூழ்கியது. கப்பலில் கப்பலின் உரிமையாளர், கேப்டன், இரண்டு பணியாளர்கள் இருந்தனர்.
கப்பல் ஒருபுறமாக சாயத் தொடங்கியதும் கப்பல் உரிமையாளர் உட்பட அனைவரும் கடலில் குதித்து உயிர்தப்பினர். கடலோரக் காவல்படை மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
விபத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், சில ஊடக அறிக்கைகள் இது நிலைப்பாடு பிரச்சினை (stabilisation issue) காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.
தொடர்ந்து விசாரணை மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது.
முதல் பயணத்திலேயே ரூ.7 கோடி மதிப்பிலான சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
``அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்; அதனால்தான்'' - செல்வப்பெருந்தகை சொல்வதென்ன?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR