அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், அதற்கு எதிராக பல்வேறு பதாகைகளை அவர்கள் ஏந்தியுள்ளனர்.
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுகவில் பிரிந்தவர்களை சேர்க்கவில்லை என்றால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை நாங்கள் செய்வோம். எடப்பாடியிடம் 6 அமைச்சர்கள் சென்று , பிரிந்து போனவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி இடம் வலியுறுத்தினோம், அதை எதையும் கேட்க அவர் தயாராக இல்லை. வெளியே சென்றவர்களை தேர்தலுக்கு முன் கட்சியில் சேர்க்க வேண்டும், 10 நாட்கள்தான் காலக்கெடு. அதற்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” எனக் கூறினார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்ததற்கு எதிராக பல்வேறு பதாகைகளை அவர்கள் ஏந்தியுள்ளனர். பேனரில், “நரிகளுக்கு என்ன வந்தது கேடு! உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு... அண்ணா திமுகவில் அனைவரும் உங்களோடு! நீங்க மட்டும் போதும் தலைவா நாங்க இருக்கோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.