ஜிஎஸ்டி சீர்திருத்தம்:கார்கள், பைக்குகளுக்கு விலை குறைவு!இனி கியர் பைக்கா? ஸ்கூட்டரா? சூப்பர் பைக்கா? எது வாங்குவது பெஸ்ட் தெரியுமா?
Seithipunal Tamil September 06, 2025 05:48 AM

புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக, மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் செப்டம்பர் 22 முதல் இரண்டு முக்கிய வரி விகிதங்கள் – 5% மற்றும் 18% – மட்டுமே அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதன் விளைவாக நடுத்தர வர்க்க மக்களுக்கு தேவையான பல பொருட்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் பெரிய மாற்றம்

1,200 சிசி-க்கு குறைவான பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜி வாகனங்கள் (4,000 மிமீ-க்கு மிகாத நீளமுள்ளவை.1,500 சிசி-க்கு குறைவான டீசல் வாகனங்கள் (4,000 மிமீ நீளமுள்ளவை)

இதுவரை 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 18% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும். இதன் காரணமாக மாருதி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா போன்ற நிறுவனங்களின் பல கார்கள் மற்றும் பைக்குகளின் விலை குறையக்கூடும்.

ஆனால்,1,200 சிசி-க்கு மேற்பட்ட பெட்ரோல் கார்கள்,1,500 சிசி-க்கு மேற்பட்ட டீசல் கார்கள்,4,000 மிமீ-க்கு அதிகமான நீளம் கொண்ட வாகனங்கள்,350 சிசி-க்கு மேற்பட்ட பைக்குகள், படகுகள், விமானங்கள், பந்தய கார்கள்

இவற்றிற்கு 40% சிறப்பு வரி விதிக்கப்படும். இதனால் ஆடம்பர வாகனங்கள் மற்றும் பெரிய பைக்குகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மின்சார வாகனங்கள் (EVs)

தற்போது 5% ஜிஎஸ்டி வரி தொடர்ந்தும் அமலில் இருக்கும்.
ஆனால், ரூ. 20 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள மின்சார கார்கள் மீது 18% ஜிஎஸ்டி, அதற்கு மேற்பட்ட விலையுள்ள ஆடம்பர EV கார்கள் மீது 28% ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் டெஸ்லா மற்றும் சீனாவின் BYD போன்ற நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

வீட்டு உபயோக பொருட்கள் – வரி குறைவு

டிவி, ஏர் கண்டிஷனர், 350 சிசி-க்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள் – 18% வரியில் அடங்கும்.சிமெண்ட் – 28% லிருந்து 18% ஆக குறைவு.மூன்று சக்கர வாகனங்கள் – 28% லிருந்து 18% ஆக குறைவு.டிஷ்வாஷர், மானிட்டர், புரொஜெக்டர் போன்ற ஆடம்பரப் பொருட்களும் 18% வரியில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதிக வரி விதிக்கப்படும் பொருட்கள்

பான் மசாலா,சிகரெட்,சர்க்கரை கலந்த குளிர்பானங்கள்,கார்பனேட்டட் பானங்கள்

இவற்றுக்கு 40% வரி தொடரும். மொத்தத்தில், இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் நடுத்தர வர்க்க மக்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு, ஆடம்பர வாகனங்கள் மற்றும் உயர்தர மின்சார கார்களுக்கு சுமை அதிகரிக்கும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.