சென்னை குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நகை கொள்ளை சம்பவம் தொடக்கத்தில் சாதாரண திருட்டாக தெரிந்தாலும், பின்னணியில் நடந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காந்தி சாலை, மணிகண்டன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி அபிதா (60) தன்னுடைய 88 வயது மாமியார் வள்ளியம்மாளை தாக்கி, நகையை பறிக்க தனது 35 வயது கள்ளக்காதலனை பயன்படுத்தியிருக்கிறார்.
சம்பவத்தன்று, ராஜேந்திரன் வேலை காரணமாக வீட்டிற்கு வராத நிலையில், அபிதா மற்றும் அவரது மாமியார் மட்டும் வீட்டில் இருந்தனர். இரவு 10.30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் வீட்டின் சுவரில் ஏறி உள்ளே புகுந்து, மாமியார் வள்ளியம்மாளை தாக்கி 11 சவரன் தங்க நகைகளை பறித்து தப்பியதாக முதலில் கூறப்பட்டது. அபிதாவும் தாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மை வெளி வந்தது.
அதாவது அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம், அபிதாவிடம் ஏற்பட்ட பதில் முரண்பாடுகள் மற்றும் அவரது உடலில் காயம் இல்லாதது போன்ற காரணங்களால், போலீசாருக்கு சந்தேகம் உறுதியானது. அதனைத் தொடர்ந்து விசாரித்த போது, சம்பவம் நடந்த நேரத்தில் அபிதா ஒருவர் உடன் பேசிக் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் தெளிவாக பதிவாகி இரந்தது. அந்த நபர் யார் என்ற போலீசார் நடத்திய சோதனையில், முழு நிகழ்ச்சி தெரியவந்தது.
அபிதாவிற்கு குழந்தை இல்லை என்பதால், கோவிலுக்கு செல்லும் போது ஒரு 35 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறி, அதன் பின்னணியில், பணத் தேவைக்காக கள்ளக்காதலன், அபிதாவிடம் நகை கேட்க ஆரம்பித்துள்ளார். ஆனால், நகை மாமியாரிடம் இருப்பதால், சந்தேகம் வராமல் அதை திருட்வதற்கான திட்டத்தையும், வழிமுறையையும் அபிதா வகுத்திருக்கிறார்.
முன்னதாக, இதே மாதிரியான ஒரு சம்பவம் நடந்துள்ளதுடன், அதனை சமாளித்த அபிதா, இந்த முறையும் போலீசில் புகார் செய்ய மாட்டார்கள் என நம்பிக்கை கொடுத்து காதலனை தைரியப்படுத்தியுள்ளார். ராஜேந்திரன் இல்லாத நாளில், காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து, திட்டமிட்டபடி வள்ளியம்மாளை தாக்கி நகைகளை பறிக்கச் சொல்லியுள்ளார். மேலும் தன்னை தாக்கியது போல் நடிக்கச் சொல்லியதால், அந்த கள்ளக்காதலன் அதையும் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தற்போது அபிதா போலீசாரிடம் முழுமையாக ஒப்புக்கொண்ட நிலையில், காதலன் தலைமறைவாக உள்ளதால், அவரை தேடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. காதலுக்காக குடும்ப நம்பிக்கையை துரோகம் செய்து, மாமியாரை தாக்கி நகை கொள்ளை நடத்திய 60 வயது பெண் மீது சமூக வட்டாரத்தில் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.