அமெரிக்க வரி விவகாரம்: "ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம்" - நிர்மலா சீதாராமன் உறுதி
Vikatan September 06, 2025 05:48 PM

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால், அமெரிக்கா இந்தியாவிற்குக் கூடுதல் 25 சதவிகித வரி விதித்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இது குறித்து, இந்திய நாட்டின் நலனுக்கும், இந்திய மக்களின் தேவைக்கும் எது நல்லதோ, அதை இந்தியா தொடர்ந்து செய்யும் என்று இந்தியா கூறியது.

இதை மீண்டும் உறுதிசெய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மோடி - புதின் நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?

நேற்று, தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன், "ரஷ்ய எண்ணெய்யோ அல்லது எதுவாக இருந்தாலும், விலை, தளவாடங்கள் போன்றவற்றைப் பொறுத்து, நமக்கு எது பொருந்துமோ, அதைத்தான் நாம் செய்வோம்.

அதிக மதிப்புள்ள அந்நிய செலாவணி தொடர்பான பொருளாக இருப்பதால், நமக்கு எது மிகவும் பொருத்தமானது என்பதைப் பொறுத்து நாம் ஒரு முடிவை எடுப்போம்.

அதனால், சந்தேகமில்லாமல், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்குவோம்" என்று கூறியுள்ளார்.

வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.