ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆபத்து – மத்திய அரசு எச்சரிக்கை – உடனே இத பண்ணுங்க!
TV9 Tamil News September 06, 2025 10:48 PM

ஆண்ட்ராய்டு போன்களை நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கூகுள் வெளியிட்ட அறிவிப்பின் பின்னணியில் இந்த எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு போன்கள் ஹேக்கர்கள் கையில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நம் அனைத்து விவரங்களும் போனில் இருக்கும் என்பதால் அவை தறாக பயன்படுத்தலாம். இந்த பிரச்னையை எப்படி சரி செய்வது என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டில் உள்ள குறைபாடுகளால் பாதிப்பு

இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஆண்ட்ராய்டில் உள்ள குறைபாடு காரணமாக ஹேக்கர் நம் போன்களில் இருந்து முக்கிய தகவல்களை திருடுவதற்கும், குறிப்பாக சில போன்களில் சேவையை நிறுத்துவதற்கும் வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் ஃபிரேம்வொர்க், ஆண்ட்ராய்டு ரன் டைம், சிஸ்டம், ஆர்ம் காம்போனென்ட்ஸ், இமேஜினேஷன் டெக்னாலஜிஸ், மீடியா டிரெக் காம்போனென்ட்ஸ் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக உருவாக்கப்பட்டுள்ளது.  இவை ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதையும் படிக்க : ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா? எச்சரிக்கை உண்மையா?

இதில் குறைபாடுகள் ஏற்பட்டால் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துபவர்கள் குறிப்பாக சாம்சங், ஒன்பிளஸ், ஜியோமி போன்ற போன்களை பயன்படுத்துபவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். கூகுள் வழங்கிய தகவலின் படி சில குறைபாடுகளை ஹேக்கர்கள் ஏற்கனவே பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

எந்தெந்த ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கு பாதிப்பு?

தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து ஆண்ட்ராய்டு பதிப்புகளும் குறிப்பாக ஆண்ட்ராய்டு 13, 14, 15 மற்றும் சமீபத்தில் வெளியான ஆண்ட்ராய்டு 16 வரை பாதிக்கப்படலாம் என கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம் என கூகுள் எச்சரித்துள்ளது.

கூகுள் இந்த சிக்கல்களை சரி செய்யும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பயனர்கள் இந்த அப்டேட்டை தங்களது போனில் நிறுவது மூலம் தங்களுக்கு வரும் ஆபத்தில் இருந்து பாதுகாக்க முடியும். இந்த அப்டேட் கூகுள் பிக்சல் போன்களுக்கு மட்டுமல்லாமல், சாம்சங், ஒன்பிளஸ், ஜியோமி போன்ற நிறுவங்களுக்கும் அடுத்த சில நாட்களில் அப்டேட்டை வழங்க உள்ளன.

இதையும் படிக்க : உங்கள் கூகுள் அக்கவுண்டை வேறு யாரும் பயன்படுத்துகிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?

எப்படி அப்டேட் செய்வது?
  • உங்கள் மொபைலில் Settings பகுதிக்கு செல்லவும்.
  • System Update-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
  • புதிய அப்டேட் உள்ளதா என சரி பார்க்கவும்
  • அப்டேட்ட டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்
  • போனை ரீஸ்டார்ட் செய்யவும்

இதன் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பாதுகாப்பாக இருக்கும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.