நாளை செப்டம்பர் 7ம் தேதி பொன்னேரி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதன் காரணமாக சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பொன்னேரி பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரை/மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை இடையேயான ரயில்கள் செப். 7 ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப். 8 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்குச் செல்லும் ரயில்களும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் ரத்து செய்யப்படுகிறது.
அதற்குப் பதிலாக சென்னை கடற்கரை/மூர் மார்க்கெட் முதல் மீஞ்சூர் வரையிலும், மீஞ்சூரில் இருந்து சென்னை கடற்கரைக்கும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. நாளை மறுதினம் செப். 8ம் தேதி அதிகாலை 4 மணிக்குப் பிறகு வழக்கம்போல ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?