விஜயகாந்துக்கு அது பிடிக்கவே பிடிக்காது.. அவர் டென்ஷன் ஆகி.. மோகினி சீக்ரெட் ஷேரிங்..
CineReporters Tamil September 06, 2025 10:48 PM

தமிழ் சினிமாவில் கவர்ச்சிகரமான முகம் கொண்டு முதல் படத்திலிருந்து மக்கள் மக்கள் மனதிற்கு நெருக்கமானவர் நடிகை மோகினி. 1991 ஆம் ஆண்டு இவர் நடித்த ”ஈரமான ரோஜா” மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடிப்படையில் இவர் தஞ்சாவூரில் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவர்.

அதனால் இவருக்கு தமிழ் சரளமாக வரும். தமிழ் சினிமாவிற்கு ஏற்ற முகமும் அழகும் இருந்ததால் முன்னணி நடிகையாக வலம் வருவார் இன்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1999 ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் பயணிக்க தொடங்கிவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

திருமணமான பிறகு சன் தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் சீரியல் மட்டுமின்றி மலையாள சீரியல்களிலும் நடித்து வந்தார். தற்போது மோகினி புனித மைக்கேல் கத்தோலிக்க குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் மோகினி திரைத்துறையில் தனது அனுபவங்களை அவள் விகடன் யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜயகாந்த் உடனான தனது அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

#image_title

ரஜினி, கமல் என்ற இரு இமயங்கள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு இணையான ரசிகர் படையோடு தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர் விஜயகாந்த். ரஜினிகாந்த் எப்படி மக்கள் மனதில் விரைவாக இடம் பிடித்தாரோ. அதேபோல விஜயகாந்தும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உயர்ந்தார். அது மட்டும் இல்லாமல் உதவி என்று தேடி வந்தவருக்கும் உதவக்கூடியவர். உதவி தேவைப்படுபவருக்கும் ஓடி ஓடி சென்று உதவக்கூடியவர். அப்படி சக மனிதர்களை மனிதனாக மதிப்பது இவரின் குணம்.


இந்நிலையில் நடிகை மோகினி விஜயகாந்த்திடம் தெரியாமல் வாய் விட்டு மாட்டிக்கொண்ட சம்பவத்தை பகிர்ந்துள்ளார் அதில்,” விஜயகாந்த் சாரின் தயாரிப்பு நிறுவனங்களில் இரண்டு படம் செய்து. தாய்மொழி மற்றும் தாயகம் என விஜயகாந்த் சாருடன் இரண்டு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். நான் முதல் தடவை அவரைப் பார்த்தவுடன் பயங்கரமாக ஆங்கிலத்தில் பேசி விட்டேன். அவருக்கு ஆங்கிலத்தில் பேசினால் என்றால் சுத்தமாக பிடிக்காது”.

”இந்த விஷயம் எனக்கு தெரியவே தெரியாது. நான் அப்படி பேசிக் கொண்டிருக்கையில் திடீரென்று என்னை பார்த்து தமிழ் பொண்ணு தானே நீங்க, தமிழ் பொண்ணு தமிழ்ல பேசாம ஏன் இப்படி இங்கிலீஷ்ல பேசுற அப்படின்னு கேட்டாரு. அதிலிருந்து விஜயகாந்த் சார் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார் என்றால் தமிழ் மட்டும்தான் பேசுவேன். சுற்றி சுற்றி ஒரு தடவை பார்த்துக் கொள்வேன் இருந்தார் என்றால் தமிழைத் தவிர வேறு மொழி வராது”. என்று கூறியுள்ளார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.