Madhampatty Rangaraj: மெகந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஆனால் அடிப்படையில் இவர் ஒரு கேட்டரிங் தொழில் அதிபர். தமிழ்நாட்டில் உள்ள சினிமா பிரபலங்கள், அரசியல் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல விஐபிக்களின் திருமண நிகழ்வுகளில் உணவு சமைத்து கொடுப்பது இவரின் டீம்தான். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளும் நடுவர்களில் ஒருவராக இருந்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஏற்கனவே திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் ஜாய் கிரிசில்டா என்கிற ஆடை வடிவமைப்பாளரோடு ரங்கராஜுக்கு தொடர்பு ஏற்பட்டது. திடீரென ஒரு நாள் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது தான் ஆறு மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் ஆதாரத்துடன் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
சில மாதங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் வாழ மறுப்பதாகவும் நேரில் சந்திக்க சென்றால் தன்னை தகாத வார்த்தைகளில் திட்டுவதோடு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அது நடந்து சில நாட்களில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் ரொமாண்டிக்காக பேசிய வீடியோவை கிரிசில்டா வெளியிட்டார். அதில் ‘ஏ பொண்டாட்டி.. என்ன பண்ற.. மிஸ் யூ.. லவ் யூ’ என ரங்கராஜ் ரொமான்ஸாக உருகி இருந்தார்.
ஒருபக்கம் ஓணம் பண்டிகையை ஒட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிட்டு வரும் குரோஷி என்பவர் மனைவியிடம் எப்படி புரபோஸ் செய்வது என்பதை மாதம்பட்டி ரங்கராஜ் அண்ணன் ஸ்டைலில் செய்து காட்டுகிறேன் என கேப்ஷன் கொடுத்து ரங்கராஜை போலவே பேசி வீடியோவை வெளியிட்டிருந்தார். அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் ‘டேய் ரொமான்ஸ் பத்தலடா.. ரெண்டு வாரம் என்கிட்ட டிரெய்னிங் வாடா’ என பதிவிட்டு இருந்தார். இந்த குரோஷி இப்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர். ரங்கராஜ் அந்த நிகழ்ச்சிக்கு நடுவர்.
ரங்கராஜின் அந்த கமெண்ட்டை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்திருக்கிறார்கள். மேலும் அந்த ஸ்கிரீன் சாட்டை பலரும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ‘இவன் சந்தோஷமாதான் இருக்கான்’ என பதிவிட்டு வருகிறார்கள்.