அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக கட்சியின் பல்வேறு நிலைகளில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து கடிதம் மூலம் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த சூழலில், முன்னாள் எம்.பி.யும் செங்கோட்டையனின் உறுதியான ஆதரவாளருமான சத்தியபாமா, தனது கட்சி பதவியை விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
அதிமுகவில் தற்போது வகித்து வரும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இது செங்கோட்டையனுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட முடிவு. நான் எதற்கும் தயாராக இருக்கிறேன். திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
நேற்று செங்கோட்டையனின் பதவி நீக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அவரை ஆதரிக்கும் பலரும் தொடர் ராஜினாமா செய்யும் நிலை தொடர்கிறது.