காசா பகுதியில் இருந்து மக்களை வெளியேற வேண்டும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் இஸ்ரேலிய இராணுவம், நேற்று இடம்பெயர்ந்த பாலஸ்தீனக் குடும்பங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவுகிறது. காயமடைந்தவர்களின் துயரமான காட்சிகள் உலகளவில் கண்டனத்தை கிளப்பியுள்ளன.
போர் தொடங்கிய 2023 அக்டோபர் மாதம் முதல் இன்றுவரை காசா பகுதியில் மட்டும்:64,368 பேர் உயிரிழந்துள்ளனர்1,62,367 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
காசா நகரை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ராணுவத்துக்கு உத்தரவிட்டிருப்பது சூழ்நிலையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.மனிதாபிமான நெருக்கடி உச்சத்துக்கு சென்றுள்ள நிலையில், உலக நாடுகள் உடனடி போர் நிறுத்தத்தைக் கோரி வருகின்றன.