சேலத்தில் அதிர்ச்சி... 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.!! தற்காப்பு கலை பயிற்சியாளர் கைது.!!
Tamilspark Tamil September 10, 2025 06:48 AM

சேலம் அருகே விளையாட்டு போட்டிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பயிற்சியாளரை கைது செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக இருக்கும் பயிற்சியாளரின் தம்பியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் சித்தனுர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். டேக்வாண்டோ விளையாட்டுப்போட்டியில் ஆர்வம் கொண்ட சிறுமி அதற்காக சிவதாபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார்(45) என்பவரிடம் பயிற்சி பெற்று வந்ததாக தெரிகிறது. மேலும் பல ஊர்களில் நடைபெற்ற டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகளிலும் சிறுமி பங்கு பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி திருவாரூரில் நடைபெற்ற போட்டிக்காக விஜயகுமார் அழைத்துச் செல்வதாக இருந்துள்ளது.

திடீரென அவருக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால் தனது தம்பி கணேசன் தலைமையில் மாணவிகளை திருவாரூரில் நடைபெற்ற போட்டிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் விஜயகுமார். இந்நிலையில் 14 வயது மாணவியிடம் விஜயகுமாரின் தம்பி கணேஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். போட்டிகள் முடிந்து வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையறிந்த விஜயகுமார் மாணவியின் வீட்டிற்கு சென்று தனது தம்பி பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதையும் படிங்க: ÷2 மாணவி தொடர் பலத்தக்காரம்... பி.டி சார் தப்பியோட்டம்.!! போலீஸ் வழக்கு பதிவு.!!

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மாணவி மற்றும் அவரது பெற்றோரை மிரட்டிய விஜயகுமாரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாகயிருக்கும் விஜயகுமார் தம்பி கணேசன் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.