சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உலகின் மிக ஆபத்தான பாம்புகளில் ஒன்றான கோப்ராவை இரண்டு முர்க்கோழிகள் தாக்கி தின்று தீர்க்கும் அதிர்ச்சிகரமான காட்சியை வெளியாகியுள்ளது. பொதுவாக, கோப்ரா பாம்பை பார்த்தாலே மனிதர்கள் உட்பட பல உயிரினங்கள் பயத்தில் ஓடிவிடும்.
ஆனால், இந்த வீடியோவில், இரண்டு முர்க்கோழிகள் பயமே இல்லாமல் ஒரு குட்டி கோப்ராவை எதிர்த்து நின்று, அதை தங்கள் கூர்மையான அலகால் தாக்கி உயிரோடு தின்றுவிடுவதை பார்க்க முடிகிறது. இந்த அபூர்வ காட்சி, நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
A post shared by Aditya Gupta (@vlogger_aditya_06)
வீடியோவில், ஒரு குட்டி கோப்ரா பாம்பு, தன் படத்தை விரித்து, தன்னை காக்க முயற்சிக்கிறது. ஆனால், இரண்டு முர்க்கோழிகள் அதை நெருங்கி, பயமின்றி தாக்கத் தொடங்குகின்றன.
குத்தி, தரையில் உருட்டி, கோப்ராவை முழுமையாக வீழ்த்தி, அதை உயிரோடு விழுங்கிவிடுகின்றன. இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் @vlogger_aditya_06 என்ற கணக்கில் பகிரப்பட்டு, 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. “ஒரு முர்க்கோழி இப்படி ஒரு கோப்ராவை வீழ்த்துமா?” என்று நம்ப முடியாமல், நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து, ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.