தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் விதமாக 72-வது மாவட்ட அளவிலா சதுரங்க போட்டி அகாடமி வளாகத்தில் செயலாளர் R. மாடசாமி தலைமையில் நடைபெற்றது, போட்டிகளை S. அமானுல்லா வனச்சரகர் (ஓய்வு) அவர்கள் தொடங்கி வைத்தார்,
போட்டி ஏற்பாடுகளை இயக்குனர் S.அஜ்மல்கான், இணை செயலாளர் S. நூர்ஜஹான் செய்திருந்தனர், முன்னதாக அகாடமியின் தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான S. சையது மைதீன் அவர்கள் அனைவரையும் வரவேற்றானர். வெற்றி பெற்றவர்களுக்கு அகாடமி செயலாளர் R.மாடசாமி, வனச்சரகர் (ஓய்வு) S. அமானுல்லா பரிசுகள் வழங்கி வாழ்த்தினர். வெற்றி பெற்றவர்கள் விவபம் Under - 10 - பிரிவில் 1,J.தியாஸ்ரீ 2, K.B. வேதாந் கிருஷ்ணா, 3, L.ரிஷி நந்தன் 4,S. யுவகிருஷ்ணா 5, M. விஜய்எடிசன் 6,A.ஜெய்சரன் 7,D.கிருத்திக் 8, V.ரிஷிவரதன் 9.V.விதுசுலாகோல்டா 10, R. மிதுன் ஆகியோரும்,15- வயது பிரிவில் 1, S.பிரசன்னா ஸ்ரீ 2,M. அகிலேஷ் 3, J.தியாஸ்ரீ 4, N.சாய்சரவணா 5,S. சித்தார்த் 6, R.சாத்வீகா 7, R.மாதவன் 8, P. பிரேம்,9.D. கிருத்திக், 10, R. மிதுன் ஆகியோரும், 8- வயது பிரிவில் C. ரியான் சாரதி, நிதா ஸ்ரீராஜா பாண்டியன் ஆகியோர் முதலிடமும், S.D. வருண் கிருஷ்ணன், N. தர்சன் பாண்டியன் இரண்டாம் இடமும் பெற்று வெற்றி பெற்றனர்,
இதேபோல தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தி லிட்டில் பிளவர் பள்ளியில் ஓனம் பண்டிகை மற்றும் ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் ,நிர்வாகி தமயந்தி, செயலாளர் மாத்யூ ஜோயல் ஆகியோரின் முன்னிலையில் பள்ளியின் முதல்வர்கள் உமா மகேஸ்வரி மற்றும் லதா ஆகியோர் ஓணம் பண்டிகை பற்றி கருத்துகளை கூறி சிறப்புரை ஆற்றினர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மாணவர்கள் ஆசிரியர் தின விழா பற்றிய கருத்துக்களை உரையாற்றினார். மேலும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கோலங்கள் முன்பு நின்று உற்சாகத்துடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பள்ளியில் நிர்வாகி தமயந்தி ஹென்றி அவர்கள் ஆசிரியர்களின் பெருமைகளை பற்றி எடுத்துரைத்தனர். மேலும் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பூமா, கவிதா, ராகினி ,திவ்யா, பானுப்ரியா தமிழ்ச்செல்வி ,தெய்வம், ரஞ்சனா ஆகியோர் செய்து இருந்தனர்.