ஆந்திர மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மனைவி மற்றும் கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் அஹோபிலம். இவரது மனைவி கங்காவதி. இந்நிலையில் கங்காவதிக்கும் பெங்களூருவை சேர்ந்த செண்பாசவா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இவர்களது கள்ள உறவு பற்றியறிந்த கங்காவதியின் கணவர் அஹோபிலம் தனது மனைவியை கண்டித்திருக்கிறார்.
எனினும் கங்காவதி தனது கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து கள்ள உறவில் இருந்து வந்துள்ளார். மேலும் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்து கட்டுவதற்கு காதலன் செண்பாசவா உதவியை நாடியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த தினத்தன்று தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்த கங்காவதி அவனது துணையுடன் கணவனை கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்தார்.
இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்குச் சென்று அஹோபிலம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொலை செய்ததை கங்காவதி ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கங்காவதி மற்றும் அவரது கள்ளக்காதலன் செண்பாசவாவை கைது செய்த காவல்துறையினர் இருவரையும் சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: "என் கூட வரமாட்டியா...." உறவுக்கு அழைத்த கணவன் கொலை.!! மனைவி, கள்ளக்காதலன் வெறி செயல்.!!