KamalRajini: தமிழ் சினிமாவில் டாப் ஹிட் நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தின் சுவாரஸ்ய அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஒரு தலைமுறையின் முன்னணி நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது பல நடிகர்களிடம் நடக்காது. ஆனால் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மட்டுமே இதுவரை நிறைய படங்களில் ஒன்றாக இணைந்து நடித்து வந்தனர். ஒருக்கட்டத்தில் இருவருமே பெரிய உயரத்துக்கு சென்றதால் ஒன்றாக நடிப்பதை நிறுத்தினர்.
பல ஆண்டுகள் கழித்து தற்போது இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. இப்படத்தினை லோகேஷ் கனகராஜே இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் தகவலின்படி இருவரின் மார்க்கெட்டுமே பெரிசு.
அந்த வகையில், இருவரும் ஒன்றாக நடிக்க இருப்பதால் கோலிவுட் வரலாற்றில் இப்படம் பெரிதாக பேசப்படும் என்றே நம்பப்படுகிறது. இருந்தும் இதற்கு முன்னர் இதே கூட்டணியில் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ரஜினிகாந்த் சம்பளத்தை காரணம் கூறி முதலில் மறுத்துவிட்டார்.
தற்போதும் அவரிடம் ஒரு தயக்கம் இருப்பதாகவே கூறப்படுகிறது. ஏற்கனவே கமலின் கேரியர் ஆட்டம் கண்டு வரும் நிலையில் இந்த கூட்டணியில் உருவாகும் படம் அவருக்கு நல்ல மாற்றத்தை தரும் என்பதால் இப்போது ஒப்புகொண்ட படத்தை தள்ளி வைத்துவிட்டு இதற்கு ஓகே சொல்லி தயாராகி விட்டார்.
ஆனால் லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்த படம் முடித்துவிட்டே அவர் இந்த பக்கம் வருவார். அதுபோல, ரஜினிகாந்தும் அடுத்து ஜெயிலர் 2 படத்துக்கு செல்ல இருக்கிறார்.
அந்த படம் முடிவதற்குள் தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து விடும். இப்படத்தினை ராஜ்கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதனால் திமுக ஆட்சிக்கு வந்தால் தைரியமாக இந்த படத்தில் நடித்து விடலாம்.
ஆனால் இன்னொரு கட்சி வரும் பட்சத்தில் ரெட்ஜெயண்ட் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க தயங்குவார். அதன்காரணமாகவே இப்படத்தின் அறிவிப்பையும் தள்ளிப்போட சொல்லி இருக்கிறாராம். அதுபோல இப்படத்தின் மார்க்கெட் பெரிசு என்பதால் ரஜினிகாந்த் 200 கோடி சம்பளம் பெறுவார்.
அதே சம்பளத்தை கமல்ஹாசனும் கேட்பார். லோகேஷ் கூலிக்கே 50 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். இதனால் இப்படத்துக்கு 100 கோடி வரை சம்பளம் வாங்குவார். அனிருத், ஹீரோயின் மற்றும் ஷூட்டிங் செலவை வைத்து பார்க்கும் போதே படத்தின் பட்ஜெட்டே 600 கோடியை தாண்டும் எனக் கூறப்படுகிறது.
இப்படம் உருவாகும் பட்சத்தில் கோலிவுட்டின் முதல் 1000 கோடி படமாக வசூல் படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.