எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!
Dinamaalai September 11, 2025 10:48 PM

எழும்பூர் - சேலம் மற்றும் சிங்காவனம் - கோட்டயம்  பிரிவுகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் இயக்கப்படும் சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதோடு, கூடுதல் நிறுத்தங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி  ரயில் எண் 11014 கோயம்புத்தூர் - லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 11 ம் தேதி  காலை 8.50 மணிக்கு கோயம்புத்தூரிலிருந்து புறப்படும் இந்த ரயில், ஈரோடு, கரூர் மற்றும் சேலம் வழியாக திருப்பி விடப்படும். இதற்கு கரூரில் ஒரு கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும்.

ரயில் எண் 12678 எர்ணாகுளம் - கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ்: செப்டம்பர் 11 அன்று காலை 9.10 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பிலிருந்து புறப்படும் இந்த ரயில், ஈரோடு, கரூர் மற்றும் சேலம் வழியாக திருப்பி விடப்பட்டு, கரூரில் கூடுதலாக நிறுத்தப்படும்.  
ரயில் எண் 12696 திருவனந்தபுரம் சென்ட்ரல் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 20ம் தேதி  மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் கோட்டயம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இது கோட்டயத்தில் இருந்து அதன் வழக்கமான புறப்படும் நேரமான இரவு 8.05 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 12624 திருவனந்தபுரம் சென்ட்ரல் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்: செப்டம்பர் 20 அன்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், ஆலப்புழா வழியாக திருப்பி விடப்படும். இதனால், மாவேலிக்கரை, செங்கன்னூர், திருவல்லா, சாங்கனாசேரி, கோட்டயம் மற்றும் திருப்புணித்துறை ஆகிய நிறுத்தங்களை தவிர்த்துச் செல்லும். இதற்கு ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும். 
ரயில் எண் 17656 புதுச்சேரி - காக்கிநாடா போர்ட் சர்க்கார் எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் ஆந்திரப் பிரதேசத்தின் அட்டிளி ரயில் நிலையத்தில் 2 நிமிடங்களுக்கு (காலை 4:33/4:35) நிறுத்தப்படும். ரயில் எண் 17655 காக்கிநாடா போர்ட் - புதுச்சேரி சர்க்கார் எக்ஸ்பிரஸ்: செப்டம்பர் 11 முதல், இந்த ரயில் அதே அட்டிளி ரயில் நிலையத்தில் மாலை 4:43/4:45 மணிக்கு நிறுத்தப்படும். ரயில் பயணிகளின் வசதிக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.