திருப்பூரை சேர்ந்த ரிதன்யா, வரதட்சணை கொடுமையால் கடந்த ஜூன் மாதம் தற்கொலைச் செய்து கொண்டார்.
இதுதொடர்பாகக் கைதான ரிதன்யாவின் கணவர்க் கவின்குமார், மாமனார், மாமியார் ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ரிதன்யாவின் பிறந்தநாளையொட்டி கைகாட்டிப்புதூர்ப் பகுதியில், பல்வேறு நோய்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்த ரிதன்யாவின் பெற்றோர், மகளின் பிறந்த நாளையொட்டி ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளையை தொடங்க உள்ளதாகவும், இதன் வாயிலாக வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்க உள்ளதாகவும் அறிவித்தனர்.