மன்னிப்பு கேட்டார் செங்கோட்டையன்..!
Top Tamil News September 12, 2025 12:48 AM
கோபி குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மரணமடைந்து இருக்கிறார். முதலில் அவரை அதை பார்க்க சொல்லுங்கள். நீண்ட நாள் இந்த இயக்கத்தில் நான் இருக்கிறேன். என்னிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை என்பதுதான் எனக்கு வேதனை” என்று கோபத்துடன் கூறினார். ஆர்பி உதயகுமார் தாயார் மறைவு குறித்த செங்கோட்டையனின் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக செங்கோட்டையன் கூறும் போது, “ ஆர்பி உதயகுமார் தொடர்பாக கேட்டார்கள். அப்போது சொன்ன கருத்துக்கு மன்னிக்க வேண்டும். அவர் துக்கத்திலேயே தாயை இழந்து கண்ணீரில் மல்கி கொண்டிருந்த போது, அவரது குடும்பத்தினரை நேரில் சந்திக்க இயலவில்லை. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவருடைய தாயை இழந்து துக்கத்திலும், துயரத்திலும் இருக்கும் இந்த வேளையில், தாயின் அருமை பெற்ற மகனுக்கு மட்டுமே தெரியும். துக்கத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவர் ஆத்மா சாந்தியடைய அனைவர் சார்பாக கண்ணீர் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.