2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன், த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும், வருகிற 13-ந்தேதி திருச்சியிலிருந்து விஜய் தனது அரசியல் பிரசார பயணத்தை துவக்குகிறார்.
அதிலும் குறிப்பாக, திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் பொதுமக்களிடம் உரையாற்ற காவலர்கள் 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, விஜய் அடுத்த கட்டமாக பெரம்பலூருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தாலும், அங்கு பிரசார அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.
இதில் கடந்த 6-ந்தேதி அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்தும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு த.வெ.க. நிர்வாகிகள் வராதது, அனுமதி வழங்காததற்கான முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
இதனால், விஜய் பெரம்பலூருக்குச் செல்லுவாரா? இல்லையா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.