20 வயது மருமகனுடன் கள்ள உறவு... கணவனை கொன்று புதைத்த 45 வயது மனைவி.!! 2 பேர் கைது.!!
Tamilspark Tamil September 12, 2025 12:48 AM

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கணவனை கொன்று புதைத்து விட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிவ்பீர். இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஷிவ்பீர் மாயமானார். இது தொடர்பாக லட்சுமியிடம் கேட்டபோது தனது கணவர் வெளியூருக்கு வேலைக்கு சென்றிருப்பதாக கூறியிருக்கிறார். எனினும் ஷிவ்பீர் குடும்பத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதால் இது தொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்தனர்.



இதனைத் தொடர்ந்து லட்சுமியிடம் காவல்துறை விசாரித்ததில் தனது கணவனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் லட்சுமிக்கு அவரது 20 வயது மருமகனுடன் கள்ள உறவு இருந்திருக்கிறது. இதற்கு ஷிவ்பீர் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ததாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறிய தகவலின் அடிப்படையில் புதைக்கப்பட்ட ஷிவ்பீரின் எலும்புக்கூடை காவல்துறையினர் கைப்பற்றினார்.

மேலும் கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய லட்சுமி மற்றும் அவரது மருமகனை கைது செய்துள்ள காவல் துறை அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கள்ளத்தொடர்புக்காக கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.