ஹுசைன் - மணிமேகலை : Best Couple Celebrity Channel Winner |Vikatan Digital Awards 2025
Vikatan September 11, 2025 10:48 PM
டிஜிட்டல் விருதுகள் 2025

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!

`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.

Vikatan Digital Awards - 2025 Vikatan Digital Awards 2025: `யூட்யூப் உலகின் முன்னோடி - விஜய் வரதராஜ்' - Digital Icon Award Winner

யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.

இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
Best Couple Celebrity Channel

இப்பிரிவில் மைனா விங்ஸ், ஹுசைன் - மணிமேகலை, சஞ்சீவ் - ஆலியா, காயத்ரி யுவராஜ், ஷாந்தனு கிகி, சத்யதேவ் & வைஷாலி, அனிதா சம்பத், ராஜா வெற்றி பிரபு - தீபிகா, Sushi's Fun ஆகிய சேனல்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஜூரிகளின் தேர்வுபடி இந்தப் பிரிவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, ஹூசைன் - மணிமேகலை சேனல்!

The Winner Is Hussain - Manimegalai! Best Couple Celebrity Channel - Nominations

Best Couple Celebrity Channel - Hussain Manimegalai

ஜாலி, கேலி, ரகளை... இதுதான் சின்னத்திரையின் வழி நாம் பார்த்த மணிமேகலையின் பிம்பம். தன் இணையரோடு இவர் தொடங்கிய `ஹுசைன்-மணிமேகலை யூ-டியூப் சேனல்' வழி பார்த்தால் ஜுகல் பந்தியாய், ஆயிரமாயிரம் உணர்வுகளின் சங்கமம். சேனல் வீடியோக்களில் நண்பர்கள், சொந்தங்கள், பயணங்கள் என நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாய் காமெடி சேர்த்து இவர்கள் கட்டியெழுப்பி இருப்பது சென்டிமென்ட் கோட்டை.

Hussain - Manimegalai

செல்லுமிடமெங்கும் செல்போனில் நம்மையும் அழைத்துச் செல்லும் Hussain Manimegalai சேனலுக்கு Best Couple Celebrity Channel விருதளித்து மகிழ்கிறது விகடன்!

Vikatan Digital Awards 2025: `இளம் தலைமுறையின் பேவரைட்' - மதன் கெளரி; Digital Icon Award Winner

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.