Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
கிரிஷை காப்பாற்ற பாதிக்கப்பட்ட பையனின் அப்பாவிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார் முத்து. ஆனால் அவர் என்னால் எதுவுமே செய்ய முடியாது. அவன் செஞ்ச தப்புக்கு தண்டனை கிடைக்கணும் எனக் கூறிவிடுகிறார். வெளியில் போங்க எனக் கூறி விடுகிறார்.
மீனா என்னங்க காலில் எல்லாம் விழுந்தீங்க. நீங்க இப்படி செய்வீங்கனு நான் நினைக்கலை என்கிறார். அவன் குழந்தை பருவத்தில சந்தோஷமா இருக்கணும். அதுக்காக நான் இதை செய்வேன் எனக் கூறிவிடுகிறார். பாதிக்கப்பட்ட பையனின் அம்மா ஆபீஸ் கிளம்பிவிடுகிறார்.
ஆனால் முத்து, மீனா வாசலிலேயே காத்து இருக்கின்றனர். மீனா தனக்கு தெரிந்த பூ விற்கும் பெண்ணை பார்த்து அந்த வீட்டு ஆளை குறித்து கேட்க அவர் எப்பையுமே அவர் இப்படி தான் முசுடு போல இருப்பாரு. அவர்கிட்ட வேலைக்கே ஆகாது என்கிறார்.
இருந்தும் முத்துவும், மீனாவும் வாசலிலேயே உட்கார்ந்து இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பையனின் வீட்டு பெண்களும் அதை கவனித்து கொண்டு இருக்கின்றனர். ரோட்டில் சாப்பிட்டு கொண்டு கிரிஷை காப்பாற்ற இருவரும் வாசலில் இருக்கின்றனர்.
அந்த பையனின் அப்பா வேலை விட்டு வீட்டுக்கு வருகிறார். பின்னர் வீட்டிற்குள் சென்றவர் அந்த பெண்கள் முத்து, மீனா நாள் முழுவதும் நிற்பதை குறித்து சொல்ல அந்த ஆள் இருவரையும் வீட்டிற்குள் அழைத்து சத்தம் போடுகிறார். என் முடிவில் மாற்றம் இல்ல என்கிறார்.
நீங்க எங்களை உள்ளே கூப்பிட்டதே மாற்றத்தோட அறிகுறிதான். கிரிஷிடம் உங்க பையன் விளையாட்டா கலாய்ச்சி இருக்கான். ஆனால் அவனும் சின்ன பையன்தான். கிரிஷ் தன்னோட அம்மாக்கிட்ட இல்லாதது ரொம்பவே அவனை பாதிச்சிருக்கு. அதான் அவன் அப்படி நடந்து இருக்கான் எனப் புரிய வைக்கிறார்.
ஆனால் அந்த பாதிக்கப்பட்ட பையன் அப்பா நாளைக்கு கிரிஷுக்கு ஒரு டெஸ்ட் வைப்பேன். அதில் அவன் எதற்காக செஞ்சான் என்பது தெரிந்துவிடும். அப்படி அவன் மேல தப்பு இல்லனா தெரிஞ்சா கேஸ் வாபஸ் பண்ணிடுவேன். அவன் வேணுமென்றே செஞ்சி இருந்தா அவன் ஜெயிலுக்கு போகணும் என்கிறார்.
முத்து சரி சார் நீங்க இவ்வளோ செஞ்சது பெரிய விஷயம். நாளைக்கு உங்களுக்கு கிரிஷ் குறித்து தெரிஞ்சிடும் எனக் கூறிவிட்டு கிளம்புகிறார். காரில் என்னங்க அவர் இப்படி சொல்றாரு. என்ன டெஸ்ட் என்பதே சொல்லலையே என மீனா பேசிக்கொண்டே வருகிறார்.
இதையடுத்து மகேஸ்வரிக்கு கால் செய்து கிரிஷை அழைக்க வருவதாக சொல்கிறார். போன விஷயம் என்ன ஆச்சு எனக் கேட்க அவர் நாளைக்கு கிரிஷுக்கு எதோ டெஸ்ட் வைப்பாராம். அது வெற்றி பெற்றா தான் விடுவாராம் என்க் கூறிவிடுகிறார்.
பின்னர் ரோகிணி கிரிஷை தனியாக அழைத்து நீ அவங்க கூட போக கூடாது. இந்த ஆண்ட்டி வீட்டில் இருப்பேனு சொல்லு எனக் கூறுகிறார். ஆனால் கிரிஷ் நான் உன்னோட இருப்பேன். இல்ல பாட்டிக்கு அனுப்பு. அப்படி இல்லனா மீனா ஆண்ட்டி கூட தான் இருப்பேன் எனக் கூறிவிடுகிறார். ரோகிணி கோபமாக கிரிஷை அடித்து விடுகிறார்.
முத்து வீட்டிற்கு வந்து கிரிஷிடம் கொஞ்சி விளையாட அவரும் சந்தோஷமாக இருக்கிறார். ரோகிணியின் பேக் சோபாவில் இருப்பதால் மகேஸ்வரி அதை மறைக்க மேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறார். பின்னர் கிரிஷை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொல்கின்றனர்.