நாளை மதுக்கடைகள் செயல்படாது - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!
Top Tamil News September 11, 2025 06:48 PM

“மதுரை மாவட்டத்தில் 11.09.2025 அன்று ‘அமரர் இமானுவேல் சேகரன் நினைவு தினம்’ முன்னிட்டு, உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் (PL1/FL2/FL3/PL3A மற்றும் PL11) அனைத்தும் 11.09.2025 அன்று ஒரு நாள் மட்டும் அமரர் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று மூடப்பட்டு இருக்கும்.

மேற்படி நாளில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினங்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.