மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டி (45) லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிரஷர் அமைக்க அனுமதி வழங்க ரூ. 70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றசாட்டு தாசில்தாரருடன், அவருக்கு உடந்தையாக இருந்த டிரைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவர் குசவபட்டியில் கிரஷர் வைக்க மதுரை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு அனுமதி வழங்க தாசில்தார் ராஜபாண்டி ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட்டுள்ளதோடு, பேரம் பேசியதில் லஞ்சம் ரூ.70 ஆயிரமாக லஞ்சம் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று டிரைவர் ராம்கே (32) மூலம் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்அளித்த தகவல்படி தாசில்தார் ராஜபாண்டியையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.