நாட்டின் 15-வது குடியரசு துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை ( செப்டம்பர் 12) காலை 10 மணிக்கு பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி துணை ஜனாதிபதி பதவியில் இருந்த ஜக்தீப் தன்கர் உடல் நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் ( செப்டம்பர் 09) நடைபெற்றது.
இதில், தேஜ கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.