`டாய்லெட் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறியது எப்படி?' - செல்ஃபி எடுக்கும் சீன மக்கள் சொல்வதென்ன?
Vikatan September 13, 2025 01:48 AM

சீனாவில் புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறை தற்போது சுற்றுலாத்தலமாக மாறி இருக்கிறது. கழிப்பறை எப்படி சுற்றுலா தளமாக மாறும் என்று பலரும் யோசிக்கலாம்.

ஆனால், கழிப்பறையாக இருந்தாலும் அது கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தால் மக்கள் அதனை ரசிப்பார்கள் என்று இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது. கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த கழிப்பறையை காண பார்வையாளர்கள் அதிகம் வருகின்றனர்.

இங்கு வந்து புகைப்படம் எடுக்கவும் மக்கள் கூடுவதாக South Morning Post செய்தி வெளியிட்டுள்ளது.

டன்ஹுவாங்கில் இருக்கும் இந்த பொது கழிப்பறை எதிர்பாராத விதமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. டன்ஹுவாங் என்றால் சீன மொழியில் "பெரிய மற்றும் வளமான" என்று பொருள்படும்.

யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட பிரபலமான மொகாவோ குகைகள் அமைந்துள்ள நகரத்தில் இருக்கும் இந்த கழிப்பறை கலை மற்றும் பாரம்பரியத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கழிப்பறையில் பல்வேறு வசதிகள் உள்ளன. ஆண்ட்டி பாக்டீரியா நர்சிங் டேபிள்கள், குழந்தை பாதுகாப்பு இருக்கைகள், தானாக சுத்தம் செய்யும் அமைப்புடன் கூடிய தாய் சேய் அரை போன்ற பல வசதிகள் இதில் உள்ளன.

இதனால் பார்வையாளர்கள் இதனை ஒரு கழிப்பறையாக அல்ல, ஓய்வு இடமாக கருதி புகைப்படங்களை எடுக்க முன் வருகின்றனர்.

டன்ஹுவாங் இரவு சந்தையில் உள்ள இந்த பொது கழிப்பறை இணையத்தில் வைரலாகி, பல சுற்றுலாப் பயணிகள் அதன் கலைநயமிக்க வடிவமைப்பைப் பாராட்டி வீடியோக்களை பதிவிடுகின்றனர்.

சீனா சீனா: "மன அழுத்தைப் போக்கவே இதைச் செய்தேன்" - பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரத்தத்தைத் திருடிய நபர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.