இயக்குநர்களாக அடியெடுத்து வைத்து, நட்சத்திர நடிகர்களாக முன்னேறிய சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்திருக்கும் புதிய திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’-ன் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளிவந்தது. இதற்கு முன்பே இவர்கள் ‘ரத்னம்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும், சமுத்திரகனி பிறமொழி சினிமாவில் கலைநயமான நடிப்பால் பிரபலமாக உள்ளார்.இதில் இயக்குநர் ராம் சக்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்மேனி செல்வம்’-ல் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, படவா கோபி, லட்சுமி பிரியா சந்திர மௌலி, ஹரிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருப்பதுடன், படம் பாத்வே புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்துள்ளார்.இப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு அக்டோபர் 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.இது ஒரு பயண கதையை மையமாகக் கொண்ட படைப்பு. இதில் இடம்பெற்றுள்ள வாசகம்:
"சில பயணங்கள் உங்களை வெகு தூரம் அழைத்துச் செல்லும், மற்றவை உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்"
என்ற சொல்லில், தனித்துவமான மறக்க முடியாத பயண அனுபவம் பற்றி படம் வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக ரசிகர்களில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.இதையடுத்து படக்குழு ‘கார்மேனி செல்வம்’-ன் டீசரை வெளியிட்டு, ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.