வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிகளை மீறிய ராகுல் காந்தி - சிஆர்பிஎஃப் புகார்!
WEBDUNIA TAMIL September 13, 2025 07:48 AM

rahul gandhi

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, தனது வெளிநாட்டு பயணங்களின்போது பாதுகாப்பு விதிகளை மீறி செயல்பட்டதாக CRPF குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சிஆர்பிஎஃப் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சிஆர்பிஎஃப் அனுப்பிய கடிதத்தில், ராகுல் காந்தி பலமுறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள், விஐபி பாதுகாப்பு ஏற்பாடுகளின் செயல்திறனை பாதிக்கக்கூடும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால வெளிநாட்டுப் பயணங்களின்போது ராகுல் காந்தி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் சிஆர்பிஎஃப் வலியுறுத்தியுள்ளது.

ராகுல் காந்திக்கு ‘இசட்+’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், 10 முதல் 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் எப்போதும் அவருடன் இருப்பர். பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, ராகுல் காந்தி செல்லும் இடங்களுக்கு பாதுகாப்பு வீரர்கள் முன்கூட்டியே சென்று ஆய்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.,

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.