நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார். இந்த நிலையில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் பின்னர் தன்னுடைய கர்ப்பத்தை ஏழு முறை கலைத்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விஜயலட்சுமி அளித்த புகார் எண் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
விஜயலட்சுமி அளித்த புகார் எண் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெகதீன் பரத்வாஜ் பேச்சுவார்த்தை மூலம் தேர்வுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார் . மேலும் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரி இருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்குப் பிடித்த இடைக்காலத் தடையை நான்கு வாரங்களுக்கு நீடித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சீமானின் மேல்முறையீட்டு மனுவை வரும் செப்டம்பர் 12ஆம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென கூறியது. அதே நேரத்தில் இருவரும் தங்கள் மனுக்களை திரும்ப பெறுவதோடு மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தியது.சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு சீமான் மேல்முறையீட்டு மனு செப். 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சீமான் இந்த வழக்கில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இனி நடிகையை தொந்தரவு செய்ய மாட்டேன் எனவும் உறுதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதாவது சீமான் தொடர்ந்து அவதூறாக பேசுவதாகவும் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நடிகை தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. மேலும் சீமான் மன்னிப்பு மனுவை தாக்கல் செய்யவில்லை எனில் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.