'பையாவூர் மாங்கல்யம்' கேரளா அரசின் மெகா திருமண திட்டத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்கள்..!
Seithipunal Tamil September 13, 2025 12:48 PM

கேரளாவில் அரசு சார்பில் நடத்தப்படும் மெகா திருமணம் நடத்தப்படுகிறது. இதில் 3000க்கும் அதிகமான ஆண்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 200 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தமை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கேரளா கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையாவூர் கிராம பஞ்சாயத்து சார்பில் பின்தங்கிய பொருளாதாரம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் 'பையாவூர் மாங்கல்யம்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

குறித்த மேகா திருமண திட்டத்திற்கு இதுவரையில் 3,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 200 பெண்களே மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இதனால், இந்த விகிதத்தை ஈடு செய்ய, ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுவதை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். அதேவேளையில், பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர்.

அதாவது, அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் விண்ணப்பித்ததால் இந்த எண்ணிக்கை அதிகரித்தாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.