டைரக்டர் வெற்றிமாறன் டூ டாக்டர் வெற்றிமாறன் – பட்டம் வழங்கி கௌரவித்த ஐசரி கணேஷ்
TV9 Tamil News September 13, 2025 03:48 PM

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநர்களின் ஒருவராக இருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetrimaaran). இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் விடுதலை பாகம் இரண்டு. இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் சூரி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் நாயகன் அவதாரம் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விடுதலை பாகம் இரண்டு படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதன்படி முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்பு சில பிரச்னைகள் காரணமாக படம் தொடங்கவில்லை என்ற தகவலும் இணையத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்புவை வைத்து இயக்குநர் வெற்றிமாறன் படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதில் எதை முதலில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவார் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் வெற்றிமாறனின் பிறந்த நாள் அன்று சிம்பு உடனான கூட்டணி அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

Also Read… நடிகர்களே பாட்டு பாடிட்டா சிங்கர்ஸ்க்கு வாய்ப்பு இல்லாம போகுதே – வைரல் பாடகர் சத்யன் சொன்ன விசயம்!

டாக்டர் பட்டம் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன்:

இந்த நிலையில் வேல்ஸ் பல்கலைகழகம் சார்பாக தயாரிப்பாளரும் வேல்ஸ் பல்கலைகழக நிறுவனருமான ஐசரி கே கணேஷ் இயக்குநர் வெற்றிமாறனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும் அந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறனிடம் அடுத்து நீங்க யார் படத்தைதான் இயக்குவீங்க சூர்யாவின் வாடிவாசலா அல்லது சிம்புவின் படமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இன்னும் 10 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். இது தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இணையத்தில் கவனம் பெறும் வெற்றிமாறனின் பேச்சு:

Q: Which movie update will come first, #Suriya’s or #Simbu’s ?#Vetrimaaran: That, I’ll tell you in another ten days.#STR49pic.twitter.com/YhFuh0GriS

— Movie Tamil (@_MovieTamil)

Also Read… இயக்குநர் பிரேம் குமார் அடுத்ததா இயக்க உள்ளது இந்த மலையாள நடிகரைத்தான் – அவரே சொன்ன விசயம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.