ஒன்றரை மாத குழந்தையின் வாயில் டிஷ்யூ பேப்பரை அடைத்து கொலை செய்த தாய்
Top Tamil News September 13, 2025 04:48 PM

ராஜாக்கமங்கலம் அருகே பச்சிளம் குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே சம்பகுளத்தில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடல் தலை இல்லாமல் அழுகிய நிலையில் கிடப்பதாக தகவல் அறிந்து  நீண்டகாரை மேற்கு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வினோதினி சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை பார்த்து கிராம நிர்வாக அதிகாரி வின்சிகா பிரைட்டுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் வின்சிகா பிரைட் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து குழந்தையின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக  ஆசாரிப்பள்ளம்   அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜகமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து, சடலமாக மீட்கப்பட்ட குழந்தை குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்த குழந்தை கருங்கல் அருகே பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள் (21)-  கார்த்திக்  இருவருடையது என கண்டறியப்பட்டுள்ளது. இவரும், காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு கடந்த 42 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பின்பு கணவர் குழந்தை மீது அதிக பாசமாக இருந்ததால், குழந்தை வாயில் டிஷ்யூ பேப்பரை வைத்து பெனிட்டா கொலை செய்ய்துள்ளார். பெற்ற தாயே பச்சிளம் குழந்தையை கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.