கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டி நேற்று (செப்டம்பர் 12) துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் vs ஓமன் அணிகள் பங்கேற்றன.
இதில் ஓமனுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். டாஸ் வென்ற பிறகு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, ‘‘முதலில் களமிறங்கி பெரிய ஸ்கோரை அடிக்க விரும்புகிறோம். எதிரணி சேஸ் செய்ய முடியாத அளவுக்கு பெரிய ஸ்கோரை அடிப்போம்’’ என கூறினார்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஓபனர் சைம் ஆயுப் கோல்டன் டக் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 160/7 ரன்களை எடுத்தது.
இதைத் தொடர்ந்து, 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி ஆட தொடங்கியது. அதன்படி பாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்து வீச்சில் ஓமன் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.
முடிவில் ஓமன் அணி 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.