எனவே ரேஷன் அட்டை பெற பல லட்சம் பேர் விண்ணப்பித்து காத்துள்ளனர். இதனையடுத்து விண்ணப்பத்தின் உண்மை தன்மை ஆராய்ந்து புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய உணவு பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு தினந்தோறும் அலைய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமை ரேஷன் அட்டை திருத்த முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று அந்த முகாம் நடைபெறுகிறது.
ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய வேண்டும், புதிய உறுப்பினர்களின் பெயரை சேர்க்க வேண்டும் ,பெயரை நீக்க வேண்டும், தொலைபேசி எண் மாற்ற வேண்டும், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் மற்றும் நகல் குடும்ப அட்டை காண மனுக்களை வழங்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
ரேஷன் அட்டை வகையை மாற்ற வேண்டும் என்பவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு விண்ணப்பம் செய்யலாம், அனைத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இங்கே சென்று ஒரே நாளில் தங்கள் வேலையை முடித்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை மக்கள் தவற விட வேண்டாம் என தமிழ்நாடு பொதுவிநியோகத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.