Vijay TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க தனது அரசியல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் இதன் மூலம் தொடங்குகின்றன. இதனால் திருச்சியில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய்.
நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்படும் பொழுதே ஏகப்பட்ட ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு கூடி விட்டனர். காரிலிருந்து வெளியே வந்த விஜய் நேராக சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர் வருவதை அறிந்த ரசிகர்கள் திருச்சி விமான நிலையத்தில் கூடிவிட்டனர்.
அவர் வெளியே வந்ததும் எண்ணற்ற ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவருடன் வந்த பவுன்சர்கள் அங்குள்ள ரசிகர்களை கட்டுப்படுத்தி தேர்தல் பிரச்சார வண்டியில் விஜய் ஏற வைத்தனர். அதிலிருந்து மக்கள் கூட்டத்தில் தத்தளித்து வருகிறார் விஜய். இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மற்றும் பாஜக அரசுகளை எதிர்த்து கண்டிப்பாக அவர் பல விமர்சனங்களை முன்வைப்பார் என தெரிகிறது.
ஏற்கனவே அவர் நடத்திய இரண்டு மாநாடுகளில் இரு கட்சிகளையும் சரமாரியாக தாக்கி பேசினார். அதனால் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கண்டிப்பாக இரு கட்சிகளையும் எதிர்த்து அவருடைய வாதங்களை முன் வைப்பார் என தெரிகிறது. இது மற்ற கட்சிகளுக்கு ஒரு சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் விஜய் பிரச்சார வண்டியில் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டு ரசிகர்களை பார்த்து கையசைத்தபடியே வந்து கொண்டிருக்கிறார்.
ஒரு சில பேர் ஆளுயர மாலையை கொண்டு போக அதை வாங்கி உள்ளே வைத்துக் கொண்டார் விஜய். ஒரு ரசிகர் கூழர் கண்ணாடியை கொடுக்க அதை வாங்கி போட்டுக் கொண்டு மறுபடியும் அதை அந்த ரசிகர் இடமே கொடுத்தார் விஜய். இப்படி பல அன்பளிப்புகள் அவருக்கு கொடுக்கப்பட்டே வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்கள் அவரின் கையைப் பிடித்து தங்களது அன்பை வெளிப்படுத்த பிரச்சார வண்டிக்கு பின்னாடியே கையை நீட்டி கொண்டே வருகிறார்கள்.
ஆனால் ஒரு ரசிகரின் கையை கூட விஜய் பிடிக்கவே இல்லை. அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் பவுன்சர்கள் ரசிகர்களின் கையை தட்டியபடியே வந்து கொண்டு இருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்கள் சில பேர் கடுப்பாகி போனதும் வீடியோவில் வைரலாகி வருகின்றது. இதை டேக் செய்து நெட்டிசன்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னால் மட்டும் போதுமா ரசிகரின் கையை கூட பிடிக்கவில்லையே விஜய் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.