புரட்சிகர இந்திய விடுதலை போராட்ட வீரர் திரு.ஜதீந்திர நாத் தாஸ் அவர்கள் நினைவு தினம்!.
ஜத்தின் தாஸ் என்று அறியப்படும் ஜதீந்திர நாத் தாஸ் 1904ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவர் ஒரு புரட்சிகர இந்திய விடுதலை வீரர் ஆவார். 1921ஆம் ஆண்டு அண்ணல் காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
1929 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் நாள் சாகும் வரை உண்ணா நோன்பை லாகூர் சிறையில் துவக்கினார். 60 நாட்கள் மேல் தொடர்ந்த இந்தப் போராட்டம் ஜத்தின் தாஸின் மரணத்தால் முடிவுற்றது. 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஜத்தின் தாஸ் உயிர் நீத்தார்.
இலாகூர் சிறையில் இவர் 63 நாட்கள் உண்ணா நோன்பிருந்து இறந்தது இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலைக்கு முன்னர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டவர் ஜத்தின் தாஸ் ஒருவரே.
செப்டம்பர் 13, சர்வதேச சாக்லேட் தினம்!. (International Chocolate Day)
உலகமெங்கும் சர்வதேச சாக்லேட் தினம் இன்று செப்டம்பர் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மில்டன் எஸ்.ஹெர்ஷே என்பவர், "கார்மெல் கேண்டி" என்ற சாக்லேட்டை கண்டுபிடித்தார். 1990-ம் ஆண்டு அந்த சாக்லேட்டிற்கு புது வடிவம் கொடுக்கப்பட்டது. இவருடைய பிறந்தநாளை சாக்லேட் தினமாக கொண்டாடுகிறோம்.