நவீன எந்திரம் மூலம் நாற்று நடவு... அசத்தும் பெண் அதிகாரி!
Dinamaalai September 14, 2025 04:48 AM

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி  நந்தினி. இவர் நேற்று முன்தினம் மண்டியா மாவட்ட பஞ்சாயத்து, வேளாண் துறையுடன் இணைந்து ஹோலாலு கிராமத்தில் நவீன எந்திரம் மூலம் நாற்று நடுவது குறித்து  பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.  இதில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி நந்தினி கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். 

அப்போது அவர், சேற்று வயலில் இறங்கி நவீன எந்திரம் மூலம் நாற்று நட்டார். இது குறித்து நந்தினி  “பெண்கள் நெல் நடவு எந்திரங்களை பயன்படுத்த முடியாது, எந்திரங்களை பராமரிக்க முடியாது என்ற எண்ணத்தை போக்க, நானே வயலில் இறங்கி நவீன எந்திரம் மூலம் நெல் நடவு செய்தேன். 

தற்போதைய சூழ்நிலையில்  நெல் நடவு பணிக்கு விவசாய கூலி தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதன்காரணமாக சரியான நேரத்தில் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இனிமேல் விவசாய கூலி தொழிலாளர்களை நம்பி விவசாயிகள் இருக்க வேண்டாம். நவீன எந்திரம் மூலம் ஒரே ஆளே விவசாய நிலத்தில் நெல் நடவு செய்ய முடியும். இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.