Kamal: இந்திய சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக அறியப்படுபவர் நடிகர் கமல். நடிகராக மட்டுமல்லாமல் நடனம், பாடல், இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு என எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு பன்முக கலைஞராக திகழ்ந்து வருகிறார் கமல்ஹாசன். 1960 இல் களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி இன்று தக் லைஃப் திரைப்படம் வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஒரு ஆகச் சிறந்த நடிகராக தன்னை காட்டி வருகிறார்.
ஆரம்பத்தில் டி கே எஸ் என்ற நாடக குழுவில் சேர்ந்தார். அதன் பிறகு நடன அமைப்பாளராக இருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்து நடனம் கற்றுக் கொண்டார். தனது முதல் படமான களத்தூர் கண்ணம்மாவில் நடித்ததற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி கைகளால் தங்கப் பதக்கத்தையும் வென்றார் கமல். அதிலிருந்து கன்னியாகுமரி என்ற மலையாள படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தமிழில் அபூர்வ ராகங்கள் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்கம் என ஆறு மொழிகளிலும் சுமார் 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கமல். இவர் வாங்காத விருதுகளே இல்லை. 19 முறை ஃபிலிம் ஃபேர் விருதுகளை தட்டிச் சென்ற ஒரு மாபெரும் நடிகர் கமல்ஹாசன். இந்தியாவின் மிக உயரிய விருதுகளாக கருதப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள், செவாலியே போன்ற எண்ணற்ற விருதுகளை பெற்றிருக்கிறார்.
இப்படி சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக மதிப்பு மிகுந்த நடிகராக இருக்கும் கமல் படங்களை நான் பார்க்கவே மாட்டேன் என ஒரு நடிகை மிகவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை நடிகை மோகினி. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோசியல் மீடியாக்களில் இவருடைய பேட்டி வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறும் பொழுது ரஜினி படங்கள் மட்டும் தான் பார்ப்பேன்.
கமல் படங்களை பார்க்கவே மாட்டேன். ஏனென்றால் அவர் எல்லா ஹீரோயினையும் கிஸ் பண்ணுவது மாதிரியே நடிப்பார் .அதனால் அவர் படங்களை பார்க்கவே மாட்டேன். ரஜினி படங்கள் பார்க்கும் பொழுது அவருடைய ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். அது மட்டுமல்ல அவருடைய படங்களில் சொல்லப்படும் விஷயங்கள் தத்துவங்கள் என எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும் என மோகினி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.