செல்போன் எண்ணை காதலி ‘பிளாக்’ செய்ததால் ஆத்திரத்தில் காதலன் இளம்பெண்ணை கொலை, செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் அருகே, காதல் தொடர்பான தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூஜாரிபெட்டையைச் சேர்ந்த ரக்ஷிதா (23), மணிப்பாலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அருகில் வசித்த கார்த்திக் பூஜாரியுடன் அவர் காதலித்து வந்தார். ஆனால் திருமணத்தை கார்த்திக் தள்ளிப்போட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ரக்ஷிதா பெற்றோரின் அறிவுரையை கேட்டு அவருடன் தொடர்பை நிறுத்தி, அவரது செல்போன் எண்ணையும் ‘பிளாக்’ செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், நேற்று காலை வேலைக்கு சென்ற ரக்ஷிதாவை வழிமறித்து கத்தியால் பலத்த குத்துகளை ஏற்படுத்தினார். ரக்ஷிதா தீவிர காயமடைந்து மணிப்பாலில் உள்ள கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் தப்பி ஓடிய கார்த்திக், போலீசுக்கு பயந்து தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் பிணமாக கிணற்றில் மீட்கப்பட்டார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.