தவெக தலைவர் விஜய், சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை விஜய் திருச்சியில் இருந்து தொடங்கி உள்ளார். இந்த பிரசாரம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள், த.வெ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள்.
விமான நிலையத்தில் இருந்து மரக்கடை பகுதிக்கு சென்று பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், வழி நெடுகிலும் ஆயிரக்கணக்காக தொண்டர்கள் மேளதாளம், கட்சி கொடி அசைத்தபடி விஜய் வருகைக்காக காத்துள்ளனர்.