ஆவணி மாத சஷ்டி..சிறப்பு அலங்காரத்தில் காட்சித் தந்த முருகபெருமான்!
Seithipunal Tamil September 14, 2025 12:48 PM

பெரியகுளத்தில் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றதுராஜா அலங்காரத்தில்  சிறப்பு காட்சித் தந்த முருக பெருமானை பக்தர்கள் தரிசித்து  சென்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ பாலமுருகன்  திருக்கோயிலில் இன்று ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது 

முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் முருகனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது

தொடர்ந்து முருகனுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வேலுடன் சிறப்பு ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார் 

அதனை தொடர்ந்து   முருகனுக்கு தூபம் காட்டப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தி ஒற்றை தீபம், மகாதீப ஆராதனை மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாரதனை கட்டப்பட்டது 

இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு முருகனுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.