முக்கிய அறிவிப்பு…! வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்…! மீறினால் ரூ.5000 அபராதம்… உடனே வேலையை முடிங்க..!!
SeithiSolai Tamil September 14, 2025 02:48 PM

2025-26 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான வருமான வரிக் கணக்குகள் (ITR) தாக்கல் செய்யும் செயல்முறை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இதுவரை 6 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. “ வருமான வரித் துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வரி செலுத்துவோரும், கணக்கீட்டு நிபுணர்களும் காட்டிய ஒத்துழைப்புக்கு நன்றி. கணக்கு தாக்கல் தொடந்து நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கு ஏற்ப, 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூலை 31 என இருந்தது. ஆனால், ஐடிஆர் படிவங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களைக் காரணமாக காட்டி, கால அபராதம் இன்றி தாக்கல் செய்யும் அவகாசத்தை செப்டம்பர் 15 வரை நீட்டித்து வருமான வரித் துறை கடந்த மே மாதத்தில் அறிவித்தது. மேலும், “இன்னும் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே தாக்கல் செய்ய வேண்டுகிறோம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோரின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், 24 மணி நேர உதவி மையம் செயல்படுகிறது. தொலைபேசி மற்றும் இணைய வழியாகவும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை நிலையாக உயர்வைக் காண்கிறது. 2023-24 நிதியாண்டில்: 6.77 கோடி 2024-25 நிதியாண்டில்: 7.28 கோடி இதனால் 7.5% வளர்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் உடனடியாக அந்த வேலையை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்தால் 5000 ரூபாய் அபராத தொகையுடன் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.