புதுமணப்பெண்ணை மாட்டுவண்டியில் அமர வைத்து, ஊர்வலமாக ஓட்டிச் சென்ற மணமகன்!
Dinamaalai September 14, 2025 04:48 PM

திருமணம் முடிந்ததும், 5 கி.மீ தூரம் மாட்டுவண்டியில் ஊர்வலமாக வீட்டிற்கு சென்ற மணமக்களை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

அந்த காலத்தில் திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து ஊர்வலமாக தங்களது வீட்டிற்கு செல்வர். இப்படி அனைத்து பயன்பாட்டிலும் மாட்டு வண்டிகள் முக்கியத்துவம் பெற்று இருந்தது. காலப்போக்கில் அவை மறைந்து வந்தாலும், கிராமங்களில் வசிக்கும் சிலர் தங்கள் பாரம்பரியத்தை இன்னும் மறக்காமல் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது திருமணம் முடிந்தவுடன் புது மனைவியுடன் மாட்டுவண்டியில் அமர்ந்து சென்றுள்ளார்.

பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவருக்கும், கோவையைச் சேர்ந்த காவியா என்பவருக்கும் பொள்ளாச்சி அடுத்த கரட்டு மடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணமகன், தனது புதுமனைவியை அழைத்துக் கொண்டு தனது பூர்வீக வீடான அர்த்தநாரிபாளையத்திற்கு மாட்டு வண்டியிலேயே பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி திருமணமான கையோடு, தனது மனைவி காவியாவை மாட்டு வண்டியிலேயே அமர வைத்து அழைத்துச் சென்றார். கரட்டு மடத்தில் இருந்து அர்த்தநாரிபாளையம் வரையிலும் 5 கி.மீட்டர் தூரத்துக்கு மணமகனே மாட்டு வண்டியை ஓட்டி சென்றார். திருமணமான புதுமண தம்பதியினர் ஒன்றாக மாட்டு வண்டியில் பயணம் செய்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.