Rajinikanth: கமலுக்கு மட்டும் அதில் எக்ஸ்ட்ரா செய்வார்… மேடையிலேயே குறைப்பட்டு கொண்ட ரஜினிகாந்த்!
CineReporters Tamil September 14, 2025 07:48 PM

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா உலகில் கமலுக்கு மட்டும் இளையராஜா எக்ஸ்ட்ரா செய்வார் என ஓபனாக பேசி இருக்கும் விஷயம் வைரலாக பரவி வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக பல ஆண்டுகளாக இருந்து வரும் இளையராஜாவை கௌரவிக்கும் விதமாக இன்று தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது. அதில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துக்கொண்டனர். 

அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, விஜிபியில் ஜானி கம்போசிங் நடந்து கொண்டு இருந்தது. நான் அங்கையே தங்கி இருந்தேன். அப்போது மகேந்திரன் சாரும், இவரும் வந்து இருந்தார்கள். இரவு ஆகிவிட்டது. நாங்க இவரிடம் குடிக்கலாமா எனக் கேட்டோம். 

இவரும் சரியென கூற பீர் குடித்தார். நைட் 3 மணி வரை ஒரே ஆட்டம். அண்ணன் ஒரே லவ்வு. அதனால் தான் இந்த பாட்டெல்லாம் இன்னும் நிறைய இருக்கு. சீக்கிரம் இளையராஜாவின் சுயசரிதையை படமாக ரிலீஸ் செய்யுங்க. நான் கூட திரைக்கதை எழுதி தரத் தயார்.

rajinikanth

Incredible இளையராஜா எனச் சொல்லி கொள்வதில் எனக்கு பெருமை. உலகத்தில் வாழும் தமிழர்களின் நாடி, நரம்பில் இளையராஜாவின் இசையே இருக்கிறது. நான் அவரை ஒரு மாமனிதராக பார்க்கிறேன். 8,000க்கும் அதிகமான பாடல்களை 1,600 படங்களில் பாடி இருப்பது சாதாரண விஷயமா என்ன!

ஒரு படத்தின் போது இளையராஜா போட்ட பாடல்கள் எனக்கு திருப்தி இல்லை. ஆனால் அவரோ இந்த பாட்டை போடுங்க. ஓடலைனா நான் ஹார்மோனியை தொடவே மாட்டேன் என்றார். என்னாசாமி இப்படி சொல்றீங்க எனக் கேட்டேன். 

அந்த தாயு சொல்ல வைக்கிறா? நான் சொல்றேன் எனக் கூறிவிட்டார். நான் ஒரு கட்டத்தில் என்னுடைய படத்தையே காசை கொடுத்து ஓட்டிவிடலாம் என்ற முடிவில் இருந்தேன். ஆனால் படம் அவர் சொன்ன மாதிரியே சில்வர் ஜூம்ளி ஆனது. அவர் சொன்னதெல்லாம் பழிக்கும். 

எனக்கு, கமல்ஹாசன், முரளி, மோகன், விஜயகாந்த், எல்லாருக்கும் ஒரே டைமில் மியூசிக் போட்டு கொடுத்தார். ஆனா எல்லாருக்கும் ஒரே மாதிரி பண்ணுறேனு சொல்லுவார். ஆனா கமலுக்கு கொஞ்சம் எக்ஸ்டரா. இதை முன்னாடியே சொல்லி இருக்கேன். இப்போ முதல்வர் முன்னாடியும் பதிவு செய்றேன் எனக் கூறி இருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.