Vijay: இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்து ஒரு மாபெரும் கலை நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார் இளையராஜா . அவருடைய இந்த சாதனையை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசு பிரமாண்டமாக நேற்று ஒரு பாராட்டு விழாவை நடத்தியது. நேரு ஸ்டேடியத்தில் நடந்த அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் பிற அமைச்சர்கள் திரை நட்சத்திரங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் ரஜினி பேசியது பெரிய அளவில் மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டது. அது மட்டுமல்ல ஆரம்ப காலங்களில் ரஜினியும் இளையராஜாவும் எப்படி எல்லாம் பழகினார்கள் இருந்தார்கள் என்பதை பற்றிய நினைவலைகளை ரஜினி அந்த மேடையில் பேசியிருந்தார். இந்த 50 வருடங்களில் 1500 படங்கள், 8000 பாடல்கள் என்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது.
70 80களில் இசையமைத்த பாடல்கள் கூட இப்போது திரைக்கு வந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. ஏன் சமீபத்தில் வெளியாகும் படங்களில் கூட இவர் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தி தான் அந்தப் படங்களே ஹிட் ஆகி விடுகின்றன. அந்த அளவுக்கு இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் நாடி நரம்பு எல்லாம் கலந்து போயிருக்கின்றன என்றெல்லாம் ரஜினி அந்த மேடையில் பேசினார்.
அதில் அவர் குறிப்பிட்டு பேசியது ஒரு பெரிய பேசுப் பொருளாக பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டும் புதிய பழைய எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக இருந்து கொண்டும், வாங்க 2026 இல் பார்க்கலாம் என தனக்கே உரிய பாணியில் புன்னகையோடு செயல்பட்டு வருகிறார் என் நண்பர் முதல்வர் ஸ்டாலின் என கூறியது பெரிய பேசு பொருளாக பார்க்கப்பட்டிருக்கிறது.
இது விஜயைத்தான் மறைமுகமாக பேசியிருக்கிறார் என்றும் பலபேர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் ரஜினி பேசிய அந்த கருத்துக்கு இவர் பதிலடி கொடுத்து இருக்கிறார். அதாவது 25 வருடங்களாக அரசியலுக்கு வருவேன் என கூறிவிட்டு கடைசி நேரத்துல எஸ்கேப் ஆகிட்டீங்க. ஆனால் சிரஞ்சீவி கமல் விஜயகாந்த் பவன் கல்யாண் விஜய் இவர்கள் அனைவருமே சொன்னபடி அரசியலுக்கு வந்துட்டாங்க.
bluesattaimaran
மைக்க நீட்டும் போது நான் அரசியல் பேச மாட்டேன்னு சொல்றது, அதனால் எத்தனை முறை பொங்கி எழுந்திருக்கீங்க? ஆனா மேடை கிடைச்சா மட்டும் அரசியல் பேச வேண்டியது. இளையராஜா பாராட்டு நிகழ்ச்சியில் அரசியல் பேச வேண்டிய அவசியம் என்ன என ரஜினிக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.