Top Producers: தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் தயாரிப்பாளர்களுக்கு இந்த நிலைமையா அப்படிதான் இருக்கிறது. ஒரு காலத்தில் ஆஹா ஓஹோன்னு கொடிகட்டி பறந்த தயாரிப்பாளர்களான ஜெமினி ஸ்டுடியோஸ், ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ப்ரொடக்ஷன், ஆண்டாள் பிலிம்ஸ் என இந்த மாதிரி ப்ரொடக்ஷன் கம்பெனிகள் அந்த சமயத்தில் ஓஹோன்னு இருந்தார்கள். அதன் பிறகு ஒரு சில படங்கள் நல்ல படங்களாக கொடுத்தாலும் இப்பொழுது அவர்கள் படங்களே பண்ணுவதில்லை. இப்படி தயாரிப்பாளர்களின் நிலைமைக்கு என்ன காரணம் என்பதை பற்றி பிரபல மூத்த பத்திரிகையாளர் சுபேர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரும் நடிகர்களுக்கே தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. பல நடிகர்கள் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் சும்மாதான் இருக்கிறார்கள் என்பது தான் உண்மையான நிலவரம். உச்ச நட்சத்திர நடிகர்கள் சில பேருக்கு தயாரிப்பாளர்கள் இருக்கலாமே தவிர இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு தயாரிப்பாளர்களே கிடைப்பதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு படத்தை தயாரித்துவிட்டு தெறித்து ஓடும் அளவுக்கு ரிசல்ட் அவர்களை பயமுறுத்தி விடுகின்றன. சமீபத்தில் மூன்று தயாரிப்பாளர்கள் ஆந்திராவில் இருந்து வந்தார்கள்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் குட் பேட் அட்லி படத்தை தயாரித்த கம்பெனி. அந்தப் படம் அவர்களுக்கு எதிர்பார்த்த வசூலை கொடுக்கவில்லை. பெரிய பட்ஜெட் ஆகத்தான் முதலீடு செய்தார்கள். இதே மாதிரி அடுத்த நிறுவனம் மதராசி படத்தின் தயாரிப்பு நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ். அந்த படமும் எதிர்பார்த்த அளவு அதாவது பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. அவர்களும் அடுத்த படம் பண்ணுவாங்களா என்பதும் தெரியவில்லை. தமிழ் சினிமாவிலேயே பாரம்பரியமாக படம் பண்ணிக் கொண்டிருக்கும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனமாகட்டும் ஏவிஎம் நிறுவனமாகட்டும் லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனமாகட்டும் தேனாண்டல் நிறுவனமாகட்டும் இப்படி ஒரு பெரிய லிஸ்ட் தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக இருந்தது.
இதில் யாருமே இப்பொழுது படம் பண்ணவே இல்லை. அதற்கு காரணம் என்னவெனில் ஒரு காலத்தில் கதையை நம்பி படம் எடுத்தார்கள். கதைதான் ஒரு ஹீரோவை பிக்ஸ் பண்ணும். ஆனால் இப்பொழுது ஹீரோவின் கால்ஷீட் கிடைத்தால் போதும் அப்படியே இந்த ஹீரோ ஒரு படம் வெற்றி அடைந்தால் அவர்களுடைய சம்பளத்தை பெரிய அளவில் உயர்த்தி யாருமே தொட முடியாத அளவுக்கு உயர்ந்து விடுகிறார்கள். அதே மாதிரி புதுசாக வரும் இயக்குனர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்றால் கிடைத்த பட்ஜெட்டில் படம் பண்ணி விடுகிறார்கள். ஒரு சில இயக்குனர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு படத்தையே போட்டுக் காட்டாமல் நேரடியாக ரிலீஸ் செய்து விடுகிறார்கள்.
எவ்வளவு நாளில் முடிப்பீர்கள் என்று கேட்டாலும் சரியாக பதில் வராது. இப்படியே இருக்கும் பட்சத்தில் தான் பல தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பில் இருந்து பின்வாங்கி விட்டது .இப்படி ஒரு பக்கம் நடிகர்கள் ஒரு பக்கம் இயக்குனர்கள் செய்கிற இந்த மாதிரி வேலைகளினால் தமிழ் சினிமாவே முடங்கி விட்டது. அடுத்ததாக பிசினஸ். ஓடிடி பிசினஸும் கிடையாது .சேட்டிலைட் பிசினஸும் இப்போது கிடையாது. அடுத்ததாக தியேட்டரிக்கல் என்று வரும் பொழுது 20% டாக்ஸ், தியேட்டர் வாடகை என தயாரிப்பாளருக்கு ஒரு 40 சதவீதம் மட்டுமே கைக்கு வருகிறது.
அதில் சில பேர் சரியாக கணக்கு கொடுப்பார்கள் சில பேர் சரியாக கணக்கு கொடுக்க மாட்டார்கள். இப்படி தியேட்டரிக்கல் ரீதியாக வரும் பணத்தையே ஒரு தயாரிப்பாளரால் கையில் வாங்க முடியவில்லை எனும் பொழுது அவர்களின் நிலைமை எப்படித்தான் இருக்கும். அதை உணர முடிகிறது. இந்த நிலைமை வருவதற்கு காரணமே காஸ்ட் ஆஃப் ப்ரொடக்ஷன் என்ற ஒன்று மட்டும் தான் .அதாவது கேரவனுக்கே ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டியது இருக்கிறது.
ஒரு பெரிய இயக்குனருக்கு 10 லிருந்து 12 உதவியாளர்கள் வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை, நடிகர்களுக்கு என தனி பவுன்சர்கள் அவர்களுக்காகும் செலவு இதுபோக இதர செலவுகள் என காஸ்டியூம் டிசைனர் அவர்களுக்கு என ஒரு தனி சமையல் உதவியாளர் ஹேர் டிரஸ்ஸர் என பல செலவுகள் தயாரிப்பில் இருந்து தான் போகின்றன. இதுவே சம்பளம் இல்லாமல் சில பல கோடிகள் செலவாகின்றன. இதுதான் சினிமாவில் படம் எடுக்க முடியாமல் சில தயாரிப்பாளர்கள் நின்று விடுகின்றனர். இப்படியே போனால் தமிழ் சினிமாவின் நிலைமையே மோசமாகிவிடும் என சுபேர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.