இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் மீண்டும் மண்டி மாவட்டத்தின் சப்தி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மண்சரிவு காரணமாக 39 குடும்பங்கள் வீடற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிலம் கூட இல்லை என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு குறிப்பாக, இமாச்சலப் பிரதேசத்தில் மழைக்காலம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, மண்டி மாவட்டத்தின் தரம்பூரின் சப்தி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் 39 குடும்பங்கள் வீடற்றவர்களாக நிர்கதி ஆகியுள்ளார்.
அங்கு தர்மபூருக்கு உட்பட்ட சரஸ்கன் பஞ்சாயத்தின் சப்தி கிராமத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது உறவினர்களின் வீடுகளிலும், அரசாங்க தார்பாய் கூடாரங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். மழை காரணமாக தெருக்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால், மக்கள் பயணம் செய்வதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.இன்னும் சில பகுதிகளில், நிலம் முற்றிலும் மூழ்கிவிட்ட நிலையில் உள்ளது.
தற்போது சப்தி மற்றும் ரா கிராமத்தைப் பாதுகாக்க, மழைக்காலத்திற்குப் பிறகு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பேரிடரால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க வடிகால்களையும் மழைநீரையும் வடிகால் மூலம் சீரமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.